உள்ளூர் செய்திகள்
இயற்கை உரம் தயாரிப்பை ஆய்வு செய்த அதிகாரிகள்

நாகர்கோவிலில் சாலைகளை தரமாக அமைக்கவேண்டும் கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவு

Published On 2022-01-18 08:29 GMT   |   Update On 2022-01-18 08:29 GMT
நாகர்கோவிலில் சாலைகளை தரமாக அமைக்கவேண்டும் என கூடுதல் தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
நாகர்கோவில்:

தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச்செயலாளர் சிவதா-ஸ் மீனா நேற்று நாகர்கோவில் வந்தார்.

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை சீரமைக்கும் பணியினை ஆய்வு செய்தார். தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாடு திட்டம் மற்றும் மூல தன மானிய நிதி திட்டத்தின் கீழ் டெரிக் சந்திப்பு பகுதியில் நடைபெற்று வரும் சாலைப்பணி,

பள்ளிவிளை பகுதியில் நடைபெற்று வரும் சாலைப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட  கூடுதல் தலைமை செயலாளர் சிவதா-ஸ்மீனா, கிருஷ்ணன்கோவில் பகுதியில் இயங்கி வரும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து வடசேரி அருகில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாநகராட்சி கட்டிடம், ஹோலிகிராஸ் நகர் பகுதிகளிலுள்ள வீடுகளில் கழிவு பொருட்களிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கப் படுவதையும் ஆய்வு மேற் கொண்டார்.

வல்லன்குமாரன்விளை பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் அமையவுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத் தையும் பார்வையிட்டார். சாலைப்பணிகள் உட்பட அனைத்து வளர்ச்சி திட்டப்பணிகளையும் தரமாக செய்வதுடன், விரைந்து முடித்திடவும், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீரினை வழங்கிடவும்  துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

 பின்னர் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் மாநராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் வாயிலாக நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற் கொண்டார்.

இந்த ஆய்வின் போது நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, கலெக்டர் அரவிந்த், மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) குற்றாலிங்கம் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News