உள்ளூர் செய்திகள்
கே.அண்ணாமலை

தமிழக ஊர்தி புறக்கணிப்புக்கு பா.ஜ.க. தலைவர் விளக்கம்

Published On 2022-01-18 07:20 GMT   |   Update On 2022-01-18 07:20 GMT
குடியரசு தின விழாவில் தமிழக ஊர்திகள் புறக்கணிப்புக்கு தமிழக பா.ஜ.க. கே.அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
கரூர்:

கரூர் மாவட்ட பா.ஜ.க. புதிய அலுவலகம் திறப்பு விழா மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன்  தலைமையில் கரூர் மதுரை புறவழிச்சாலையில் நடைபெற்றது.

மாநிலத்தலைவர் கே.அண்ணாமலை கட்சி கொடியை ஏற்றிவைத்து, புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், குடியரசுத் தினவிழா பங்கேற்பு ஊர்தியில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் அபாண்ட குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

நிகழாண்டு நாட்டின் 75 ஆவது சுதந்திர தினம் என்பதையொட்டிய கருத்தில் வாகன வடிவமைப்பு கோரப்பட்டிருந்தது. இதில் தமிழக ஊர்த்தியில் வீரமங்கை வேலுநாச்சியார், வஉசி, பாரதியார் ஆகியோர் இடம் பெற்றிருந்த வாகனங்கள் புறக்கணிக்கப்பட்டதாக சமூக ஊடங்களில் தெரிவித்து வருகின்றனர்.

இது பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்யும் விஷயம். கடந்த 3 ஆண்டுகளாக தமிழக ஊர்தியில் குடியரசு தின விழாவில் இடம் பெற்றிருந்தது.

காங்கிரஸ் ஆட்சியில் ஒரு முறை மட்டுமே தமிழக ஊர்தி இடம்பெற்றிருந்தது. பா.ஜ.க.வின் 7 ஆண்டு ஆட்சியில் தமிழகத்திற்கு 5 முறை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது கருத்து தொடர்புடையது. இதில் எவ்வித உள்நோக்கமும் இல்லை.

தமிழக தனியார் தொலைக்காட்சி ஒன்றியில் குழந்தைகள் பங்கேற்ற ரியாலிட்டி ஷோவில்  பிரதமரை கிண்டல் செய்யும வகையில் காட்சி அமைப்பு இடம் பெற்றிருந்தது. இதுதொடர்பாக  அந்த தொ¬க்காட்சிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதனை கருத்து  சுதந்திரம் எனக்கூறி அவர்கள் ஒளிந்து கொள்ள முடியாது. அந்த நிகழ்ச்சியின் இயக்குநர் ஒரு கட்சியை சேர்ந்தவர். எனவே இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு தரமற்றதாக உள்ளதாக பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். உள்ளாட்சி தேர்தலில் மக்களின் எண்ணம் பிரதிபலிக்கும்.

நகைக்கடன் தள்ளுபடி செய்வதாகக்கூறி  72 சதவீதம் பேர் ஏமாற்றப்பட்டு உள்ளனர் என்றார்.
Tags:    

Similar News