உள்ளூர் செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட பஸ்-லாரி.

கயத்தாறில் தகுதிச்சான்று இல்லாத பஸ்-லாரி பறிமுதல்

Published On 2022-01-18 07:12 GMT   |   Update On 2022-01-18 07:12 GMT
கயத்தாறில் வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் வாகனங்களை ஆய்வு செய்தனர். அப்போது தகுதிச்சான்று வரி கட்டாத ஆம்னிபஸ் மற்றும் லாரிக்கு அபராதம் விதித்து பறிமுதல் செய்தனர்.
கயத்தாறு:

பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து ஏராளமானோர் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்சில் பயணம் செய்து வருகின்றனர்.

நெல்லையில் இருந்து செல்லும் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை கண்காணிக்கும் பொருட்டு கயத்தாறில் போக்குவரத்து ஆய்வாளர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னையில் இருந்து நெல்லை மற்றும் நெல்லையில் இருந்து சென்னை சென்ற தனியார் ஆம்னி பஸ்கள் தகுதிச்சான்று மற்றும் வரி ஆகியவை செலுத்தாமல் சென்றது சோதனையில் தெரியவந்தது.

அதனை பிடித்து கோவில்பட்டி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் நெடுஞ்செழியன் அபராதம் விதித்தார். மேலும் பஸ்சை பறிமுதல் செய்து கயத்தாறு போலீசிடம் ஒப்படைத்தார்.

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த டாரஸ் லாரி தகுதிச்சான்று, வரி ஏதும் காட்டாமல் இருப்பது தெரியவந்தது. அதற்கு ரூ.70 ஆயிரம் வரை அபராதம் விதித்து, அதனையும் கயத்தாறு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
Tags:    

Similar News