உள்ளூர் செய்திகள்
பந்தக்கால் முகூர்த்தம்.

திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் பந்தக்கால் முகூர்த்தம்

Published On 2022-01-17 09:34 GMT   |   Update On 2022-01-17 09:34 GMT
திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் வருடாந்திர விழா தொடக்க பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது
திருவையாறு:

தருமையாதீனத்திற்கு சொந்தமான அறம்வளர்த்த நாயகி அம்மன் உடனாய ஐயாறப்பர் கோவிலில் வருடாந்திர விழாக்கள் தொடக்கத்திற்கான பந்தக்கால் முகூர்த்த விழா இன்று காலையில் நடந்தது.

சித்திரை மாதத்தில் நடக்கும் சப்தஸ்தான பெருவிழாவின் மூல விழாவும் முதன்மை விழாவுமான நந்தியெம்பெருமான் அவதார விழா வரும் பங்குனி மாதம் நடக்கிறது. 

எனவே, ஐயாறப்பர் கோவிலின் வருடாந்திர முதல் விழாவான நந்தி அவதார விழாவினை முன்னிட்டு இன்று காலை ராஜ கோபுர வாயிலிலும், சப்த ஒலி பிரகாரத்திலும் பந்தக்கால் முகூர்த்த விழா நடந்தது.

முன்னதாக கொடிமரம் வினாயகருக்கு அபிஷேக, அலங்காரம் மற்றும் மங்கள ஆரத்தி நடந்தது. 

இதனைத் தொடர்ந்து வெள்ளை மற்றும் காவி வண்ணம் பூசிய உயரமான இரண்டு மூங்கில்களின் முனையில் நாணல் மற்றும் மாவிலைக் கொத்துகள் கட்டியும், மஞ்சள் குங்குமம் பொட்டிட்டும், வேதமந்திரங்கள் பாடியும் தீபாராதனை காட்டப்பட்டது.

இவ்விழாவில் ஆலய நிர்வாகிகள், அர்ச்சகர்கள், ஓதுவா மூர்த்திகள், ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டார்கள்.
Tags:    

Similar News