உள்ளூர் செய்திகள்
கல்வீச்சில் காயமடைந்த எஸ்.ஐ.இளங்கோவன்

சப் இன்ஸ்பெக்டர் மீது கல்வீச்சு

Published On 2022-01-17 07:48 GMT   |   Update On 2022-01-17 07:48 GMT
சப் இன்ஸ்பெக்டர் மீது கல்வீச்சு தாக்கியதால் பதட்டம் ஏற்பட்டது.
திருச்சி:

திருச்சி  மாவட்டம்,  லால்குடி வட்டம் புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியம் கீழ் அரசூர் ஊராட்சியில் நேற்று தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதாக தகவல் வெளியானது.

இதையடுத்து  கல்லக்குடி போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் கீழ அரசூர் கிராமத்திற்கு சென்று  அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்தக் கூடாது என்று கூறினர். மேலும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக இருந்த அனைத்து பலகைகளை அப்புறப்படுத்தினர். 

ஆனாலும்    பிற்பகலில் பிறகு காளைகளை அவிழ்த்து விடுவதாக தகவல் அறிந்து இரண்டாவது    முறையும் சென்று அவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். ஆனாலும் கலைந்து செல்லாதவர்கள் திடீரென்று சப்&இன்ஸ்பெக்டர்  இளங்கோவன் மற்றும் போலீசார் விரைந்து சென்ற போது அவர் மீது சரமாரியாக கல் வீசி தாக்கினர்.

இதில் சப்&இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மீது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு  டி.எஸ்.பி.  நமச்சிவாயம் இன்ஸ்பெக்டர் மாலதி  மற்றும்  போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து  விசாரணை நடத்தினர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதே  கிராமத்தில் லால்குடி இன்ஸ்பெக்டர் பாலாஜி மீதும் இப்பகுதி மக்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு  தாக்குதல்  நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News