பூந்தமல்லி அருகே கார் மோதி கொத்தனார் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூந்தமல்லி அருகே கார் மோதி கொத்தனார் பலி
பதிவு: ஜனவரி 16, 2022 08:24 IST
விபத்து பலி
பூந்தமல்லி:
பூந்தமல்லி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் மாரி (வயது 42). கொத்தனார். நேற்று முன்தினம் மவுலிவாக்கம், ஜோதி நகரில் உள்ள கால்வாய் மீதுள்ள தடுப்புச்சுவரில் அமர்ந்து
இருந்தார்.
அப்போது குன்றத்தூர் நோக்கி வேகமாக சென்ற கார், மாரி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த மாரி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக
இறந்தார்.
இதுகுறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் சுசீந்திரன் (29) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.