உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

கோவை மண்டலத்தில் ரூ.59.65 கோடிக்கு மதுவிற்பனை

Published On 2022-01-15 10:49 GMT   |   Update On 2022-01-15 10:49 GMT
பொங்கலையொட்டி கோவை மண்டலத்தில் ரூ. ரூ.59.65 கோடிக்கு மது விற்பனையானது
கோவை:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் கடந்த 3 நாட்களில் 675.19 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் சார்பாக 5410 கடைகள் இயங்குகிறது இதன் மூலம் தினந்தோறும் சுமார் 100 கோடிக்கு மது விற்பனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக தீபாவளி புத்தாண்டு மற்றும் வார இறுதி நாட்களில் மது விற்பனை அதிகமாக நடைபெறும்.

அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 12-ந் தேதி 155.06 கோடி ரூபாய்க்கும், 13-ந் தேதி 23.5 கோடி ரூபாய்க்கும், பொங்கல் தினமான நேற்று 317.08 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை 274 மதுபான கடைகள் செயல்படுகிறது. இங்கு பொங்கல் தினமான நேற்று ஒரு நாளில் மட்டும் 59.65 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது.

கடந்த ஆண்டு பொங்கல் விடுமுறையின் போது ரூ.589 கோடிக்கு டாஸ்மாக்கில் மது பானங்கள் விற்பனை செய்யப்பட்டது. தமிழகத்தில் கடந்த 3 நாட்களில் 675.19 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. கடந்த வருடத்தை விட இந்த வருடம் 86 கோடிக்கு கூடுதலாக மதுபானங்கள் விற்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து இன்று திருவள்ளுவர் தினம், நாளை முழு ஊரடங்கு மற்றும் ஜனவரி 18-ல் வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News