உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

13 கிலோ குட்கா பறிமுதல்

Published On 2022-01-15 10:37 GMT   |   Update On 2022-01-15 10:37 GMT
குளச்சல் பகுதியில் 13 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது
நாகர்கோவில்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, புகையிலை விற்பனையைத் தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன்  தொடர் நடவடிக் கைகள் எடுத்து வருகிறார்.

கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், தக்கலை சப்-டிவிசனுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 15 நாட்களில் 25 கிலோ குட்கா புகையிலையும் 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

குளச்சல் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனை அருகே குட்கா, புகையிலை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் சனல்குமார் தலைமையிலான போலீசார் அங்கு சென்றபோது அங்கே சந்தேகப்படும்படியாக நின்ற  நபரை பிடித்து விசாரணை செய்தபோது அவர் குளச்சல் பகுதியை சேர்ந்த ஷேக் முகமது (வயது 51) என்பது தெரியவந்தது. 

பின்பு அவரை பிடித்து தீவிர விசாரணை செய்தார். மேலும் அந்த இடத்தை சோதனை செய்த போது அவர் சட்டவிரோதமாக உடலுக்கு கேடு விளைவிக்ககூடிய தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

அவரிடமிருந்த 13  கிலோ குட்கா, புகையிலை பொருட்களை  பறிமுதல் செய்தனர்.ஷேக் முகமது மீது இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் வழக்குப்பதிவு கைது செய்தார்.

Tags:    

Similar News