உள்ளூர் செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு- சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 75 ஆயிரத்தை தாண்டியது

Published On 2022-01-12 09:40 GMT   |   Update On 2022-01-12 09:40 GMT
தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து 75 ஆயிரத்து 83 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை:

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவர்களின் எண்ணிக்கை 75 ஆயிரத்தை தாண்டி உள்ளது. நேற்று மாலை வரையில் 75 ஆயிரத்து 83 பேர் சிகிச்சையில் இருப்பதாக தமிழக அரசு புள்ளி விவரம் தெரிவித்துள்ளது.

கடந்த மாத இறுதியில் (டிசம்பர் 31-ந்தேதி) 7,470 பேர் மட்டுமே சிகிச்சையில் இருந்தனர். இதன் மூலம் கடந்த 11 நாட்களில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த 3-ந்தேதியன்று சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 10,364 ஆக இருந்தது. இது அடுத்தடுத்த நாட்களில் மேலும் அதிகரித்தது.

கடந்த 6-ந்தேதியன்று இந்த எண்ணிக்கை 22 ஆயிரத்து 782 ஆக அதிகரித்தது. அதற்கு மறுநாள் சிகிச்சை பெறுவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 717 ஆக உயர்ந்தது. 8-ந் தேதி 40 ஆயிரத்து 760 பேர் சிகிச்சையில் இருந்தனர். 10-ந்தேதியன்று இந்த எண்ணிக்கை 62 ஆயிரத்து 767 ஆக உயர்ந்து இருந்தது.

இந்தநிலையில்தான் நேற்று (11-ந்தேதி) கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து 75 ஆயிரத்து 83 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News