உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

டாக்டர் வீட்டில் நகைகள் கொள்ளை

Published On 2022-01-09 09:29 GMT   |   Update On 2022-01-09 09:29 GMT
பட்டுக்கோட்டையில் டாக்டர் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து நகைகள், பணத்தை கொள்ளை அடித்து சென்றனர்.
பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர் பல் மருத்துவர் சிவராஜ். இவர் முத்துப்பேட்டை சாலை அணைக்காடு பைபாஸ் அருகே புதிதாக வீடு கட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் குடியேறினார். 

சிவராஜ் குடும்பத்தினருடன் சென்னைக்கு சென்றிருந்தார். இந்நிலையில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே மர்மநபர்கள் புகுந்து பீரோவில் இருந்த 79 பவுன் நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள், ரொக்கப் பணம் ரூ.10 ஆயிரம் ஆகியவற்றைத் கொள்ளையடித்து சென்றனர்.

வீட்டில் கண்காணிப்பு கேமராவை பொருத்தி, சிவராஜ் அதை மொபைல் போனில் எங்கிருந்தாலும் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடு செய்திருந்தார். இந்நிலையில் நேற்று தன் மொபைல் போனில் வீட்டில் உள்ள காமிராவை பார்த்தபோது அது மறைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து சந்தேகமடைந்த அவர் தனது உறவினர்களை தொடர்பு கொண்டு, வீட்டுக்குச் சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். 
அப்போதுதான் வீட்டில் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. 

வீட்டினுள் புகுந்த மர்மநபர்கள் காமிராவை திருப்பி வைத்து விட்டு கொள்ளையடித்தது தெரியவந்தது.

இதையடுத்து, சென்னையில் இருந்து திரும்பிய சிவராஜ் பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் புகார் அளித்தார். 

பட்டுக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் 
செங்கமலக்கண்ணன், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் 
போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை 
நடத்தினர்.

தஞ்சாவூரிலிருந்து மோப்பநாய் டஃபி வரவழைக்கப்பட்டது. அது 
சுமார் நூறு மீட்டர் தூரம் சுற்றி வந்தது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

மேலும் தடயவியல் நிபுணர்கள் ரேகைகளை பதிவு செய்தனர். 
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News