உள்ளூர் செய்திகள்
வீடு வீடாக ஆய்வு செய்த காட்சி.

பொதுமக்களின் நோய் எதிர்ப்பு சக்தி திறன் - வீடு வீடாக ஆய்வு

Published On 2022-01-09 08:32 GMT   |   Update On 2022-01-09 08:32 GMT
தொற்று பாதிப்பு குறைந்த போது கொரோனா சிறப்பு வார்டு மூடப்பட்டது.
அவிநாசி

திருப்பூர் மாவட்டத்தில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு, சுகாதாரத்துறை, மாநகராட்சி சுகாதாரப்பிரிவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். 

அதன் ஒரு பகுதியாக கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர்  மாதங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர், ‘டிஸ்சார்ஜ்’ ஆகி வீடு திரும்பிய பின்அவர்களது உடல்நிலை குறித்து ஆராயப்பட்டு வருகிறது.அத்துடன் கொரோனா பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தில் உள்ள மற்ற நபர்கள், அவர்களுக்கு  ஏதேனும் பாதிப்பு உண்டா, இரண்டு தவணை தடுப்பூசியை அனைவரும் செலுத்தி விட்டனரா என்பது குறித்து வீடுவீடாக ஆய்வு நடத்தப்பட உள்ளது.

ஏற்கனவே மாவட்டத்தில் 3 கட்டமாக நடந்த நோய் எதிர்ப்புத்திறன் குறித்த ஆய்வில்  60 முதல் 70 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்புத்திறன் கண்டறியப்பட்டது. இந்நிலையில் தொற்றின் வேகம் அதிகரித்து வருவதால் மாவட்டத்தில் 4-ம்கட்ட நோய் எதிர்ப்புத்திறன் குறித்து ஆய்வு பணி தொடங்கியுள்ளது.

மேலும் மாவட்டம் முழுவதும் கொரோனா சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு வருகிறது.கொரோனா இரண்டாம் அலையின் போது அவிநாசி மற்றும் சுற்றுவட்டார மக்களுக்கு சிகிச்சை வழங்க அவிநாசி மகாராஜா கல்லூரியில்  150 படுக்கை வசதியுடன் கொரோனா சிறப்பு வார்டு ஏற்படுத்தப்பட்டது. கூடுதலாக 200 படுக்கை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்கள் இந்த வார்டில் தங்கி சிகிச்சை பெற்று குணமாகினர். தொற்று பாதிப்பு குறைந்த போது  கொரோனா சிறப்பு வார்டு மூடப்பட்டது.
 
இந்நிலையில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக அரசு அறிவித்துள்ள நிலையில்  மீண்டும் மகாராஜா கல்லூரியில் கொரோனா வார்டு அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சுகாதார துறையினர் மேற்கொண்டனர்.அவிநாசி கண்காணிப்பு அலுவலர் வாசுகி, தாசில்தார் ராகவி, பி.டி.ஓ. மகேஸ்வரி மற்றும் சுகாதாரத்துறையினர் பார்வையிட்டு ஏற்பாடுகளை கவனித்தனர்.முதற்கட்டமாக150 படுக்கை வசதி தயார் நிலையில் வைக்கப்படும்  என சுகாதார துறையினர் தெரிவித்தனர்
Tags:    

Similar News