உள்ளூர் செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணை நீர்மட்டம் 116.56 அடியாக நீடிப்பு

Published On 2022-01-09 08:24 GMT   |   Update On 2022-01-09 08:24 GMT
அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 1,000 கன அடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 600 கன அடி வீதமும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து விநாடிக்கு 5,000 கன அடியாக நீடிக்கிறது. ஒகேனக்கல் வழியாக காவிரியில் வரும் தண்ணீர் மேட்டூர் அணையை அடைகிறது. இந்த அணைக்கு நேற்று காலை 2,576 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று சற்று குறைந்து 2565 கன அடியாக குறைந்துள்ளது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக விநாடிக்கு 1,000 கன அடி வீதமும், கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 600 கன அடி வீதமும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்தை விட பாசனத்திற்கான நீர் திறப்பு குறைவாக இருப்பதால், நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து வருகிறது. நேற்று 116.52 அடியாக இருந்த நீர் மட்டம் இன்று 116.56 அடியாக உள்ளது.
Tags:    

Similar News