உள்ளூர் செய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர்கள்.

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-01-07 08:43 GMT   |   Update On 2022-01-07 08:43 GMT
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை:

குறைந்தபட்ச ஊதியம், எட்டு மணிநேர வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் இன்று பாலசுந்தரம் சாலையில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது அவர்கள் கூறும்போது, ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். 8 மணி நேர வேலை, வார விடுமுறை மற்றும் பணி நிரந்தரத்தை உறுதி செய்ய வேண்டும். 26 ஆயிரம் ஊழியர்களின் உழைப்பு சுரண்டலை தடுத்து நிறுத்த வேண்டும். தொழிலாளர் நல சட்டங்களில் இருந்து டாஸ்மாக் தொழிலாளர்களுக்கு விலக்கு அளிப்பதை தடுத்திட வேண்டும் என தெரிவித்தனர். இந்த ஆர்ப்பட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கோவை மாநகராட்சி 80-வது வார்டு ரஞ்சய கவுண்டர் வீதியில் கடந்த 30-ந் தேதி பெண் தூய்மைப் பணியாளர் ஒருவரை அங்கு வசித்த ஆசிரியர் ஒருவர் தாக்கி உள்ளார். இது குறித்து போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அன்று மாலை எதிர் வழக்காக தூய்மைப் பணியாளர்கள் 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே எங்கள் மீது போடப்பட்டுள்ள பொய்யான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கூறி  ஒரு மணி நேரம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News