உள்ளூர் செய்திகள்
அ.தி.மு.க. எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார் நடனமாடியபடி தீர்த்தக்குடம் எடுத்து வந்த காட்சி.

பக்தர்களுடன் நடனமாடி தீர்த்தக்குடம் எடுத்து வந்த அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,

Published On 2022-01-04 08:59 GMT   |   Update On 2022-01-04 08:59 GMT
விழாவையொட்டி நேற்றிரவு அவிநாசி அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பூர்:

திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியில் பழமை வாய்ந்த மாகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் பொங்கல் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பொங்கல் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.  

விழாவையொட்டி நேற்றிரவு அவிநாசி அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர்.  

திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க.,எம்.எல்.ஏ., கே.என். விஜயகுமாரும் தீர்த்தக்குடம் எடுத்து வந்ததுடன், கையில் வேப்பிலையுடன் பக்தர்களுடன் சேர்ந்து பக்தி பரவசத்துடன் நடனமாடினார். 

இதனை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். பின்னர் மாகாளியம்மன் கோவிலுக்கு வந்ததும் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. மேளதாளம், வானவேடிக்கை என களைகட்டிய திருவிழாவை அப்பகுதி பொதுமக்கள் ஆர்வமுடன் ரசித்து அம்மனை தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News