உள்ளூர் செய்திகள்
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அனுமன் சுவாமி.

அல்லாளபுரம் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா

Update: 2022-01-03 07:32 GMT
16 வகை திரவியங்களால் அனுமனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பல்லடம்:

பல்லடம் அருகே கரைப்புதூர் ஊராட்சி அல்லாளபுரம் பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள அனுமன் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதையொட்டி சுவாமிக்கு  சந்தனம், பால், பன்னீர் உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அனுமன் பகவானை வழிபட்டனர்.
Tags:    

Similar News