உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

கும்பகோணம் பகுதியில் வெறிநாய் கடித்து 13 பேர் காயம்

Published On 2022-01-02 09:15 GMT   |   Update On 2022-01-02 09:15 GMT
கும்பகோணம் புளியம்பேட்டை கிராமத்தில் 13 பேரை வெறிநாய் கடித்ததில் காயம் ஏற்பட்டது. 3 பேர் கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கும்பகோணம்:

கும்பகோணம் அருகே உள்ள புளியம்பேட்டை, அம்பேத்கார் நகர் பகுதியில் தெருவில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த வெறிநாய் அப்பகுதியில் வசிக்கும் ஜெயபாரதி என்பவரை கடித்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து அந்த நாய் தொடர்ச்சியாக ராமதாஸ், 
மற்றும் அவரது மகன் மகிவரன் (வயது 5), ரேணுகா (30), பாங்கம்மாள் (60) 
என 13 நபர்களை வெறிநாய் கடித்துள்ளது. 

உடனடியாக ஊர் இளைஞர்கள் ஒன்று திரண்டு 13 நபர்களை கடித்த வெறிநாயை பிடித்தனர். வெறிநாய் கடித்த 13 நபர்கள் கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். 

இதில் மகிவரன், ரேணுகா, பாங்கம்மாள் ஆகிய 3 பேரும் கும்பகோணம் அரசு 
பொது மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

புளியம்பேட்டை கிராமத்தில் சாலைகளில் சுற்றித் திரியும் நாய்களை உள்ளாட்சி நிர்வாகம் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
Tags:    

Similar News