உள்ளூர் செய்திகள்
புதுப்பெண் மீட்பு

திருமணமான 3 மாதத்தில் மாயமான புதுப்பெண் மீட்பு - கணவருடன் செல்ல மறுப்பு

Published On 2022-01-01 09:20 GMT   |   Update On 2022-01-01 09:20 GMT
இரணியல் அருகே திருமணமான 3 மாதத்தில் மாயமான புதுப்பெண் மீட்கப்பட்ட நிலையில் கணவருடன் செல்ல மறுத்ததால் தோட்டியோடு காப்பகத்தில் ஒப்படைக்கபட்டார்.
இரணியல்:

இரணியலை அடுத்த திங்கள் நகர் காட்டுவிளையை சேர்ந்தவர் சதாம் உசேன் (வயது 26). கூலித் தொழிலாளியான இவருக்கும் திருவனந்தபுரம் வெள்ளறடையை சேர்ந்த அன்ஷிலாவுக்கும் 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் காட்டுவிளையில் வசித்து வந்தனர்.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கடந்த 28-ந் தேதி அன்ஷிலா திடீரென வீட்டில் இருந்து மாயமானார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்க வில்லை.

இது குறித்து சதாம் உசேன் இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவுசெய்து மாயமான அன்ஷிலாவை தேடி வந்தனர்.

அன்ஷிலாவின் பெற்றோர் வெள்ளறடை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் அவர்களும் அன்ஷிலாவை தேடி வந்னர்.

போலீஸ் தேடி வருவதை அறிந்த அன்ஷிலா நேற்று வெள்ளறடை போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் நேற்று இரவு இரணியல் போலீஸ் நிலையத்திற்கு அவரை அழைத்து வந்ததனர்.

இரணியல் போலீசாரிடம் அன்ஷிலா அளித்த வாக்குமூலத்தில், கணவர் சதாம் உசேனுடன் செல்ல தனக்கு விருப்பம் இல்லை என்று கூறினார். போலீசார் அவரை பெற்றோருடன் செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால்அன்ஷிலா, பெற்றோ ருடன் செல்லவும் மறுத்தார். இதையடுத்துபோலீசார் அவரை தோட்டியோட்டில் உள்ள காப்பகத்தில் தங்க வைத்தனர்.

திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் கணவரை பிரிந்து சென்றதும் அவர் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டதும் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News