உள்ளூர் செய்திகள்
உடுமலை தமிழக - கேரள எல்லையில் சோதனை நடைபெற்ற காட்சி.

ஒமைக்ரான் எதிரொலி - உடுமலையில் தீவிர கண்காணிப்பு

Published On 2021-12-29 10:11 GMT   |   Update On 2021-12-29 10:11 GMT
கேரளாவிலும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது
உடுமலை:

கொரோனாவில் புதிய வகையான ஒமைக்ரான் வைரஸ் பரவி நாடு முழுவதும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. உத்தரபிரதேசம், டெல்லி, மராட்டியம், அரியானா,கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

கேரளாவிலும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது.இதன் காரணமாக தமிழகம்,கேரளா, கர்நாடகா எல்லைகளில் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.சோதனை சாவடியில் போலீசார், சுகாதாரத்துறையினர் முகாமிட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.    

கொரோனா தடுப்பூசி 2 தவணையும் போட்டுள்ளனரா? அதற்கான சான்றிதழ் உள்ளதா? 72 மணி நேரத்திற்கு முன்பு கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, கொரோனா இல்லை என்ற நெகட்டிவ் சான்று இருக்கிறதா? எனவும் அவர்களிடம் கேட்கின்றனர்.  

கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களை வந்த வழியிலேயே திருப்பி அனுப்பி வருகிறார்கள். திருப்பூர் மாவட்டம் உடுமலை தமிழக - கேரள எல்லையான ஒன்பதாறு சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் போலீசார்,வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 
Tags:    

Similar News