உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

Published On 2021-12-29 07:39 GMT   |   Update On 2021-12-29 07:39 GMT
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் இத்திட்டத்தில் புதிதாக விண்ணப்பிக்கவும், புதுப்பிக்கவும் விண்ணப்பிக்கலாம்.
திருப்பூர்:

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மத்திய அரசின் ‘போஸ்ட் மெட்ரிக்‘ திட்டம், மாநில அரசின் சிறப்பு ‘போஸ்ட் மெட்ரிக்‘ திட்டத்தில் விண்ணப்பிக்க 13-ந் தேதி முதல் இணையதள வசதி செய்யப்பட்டுள்ளது. 

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் இத்திட்டத்தில் புதிதாக விண்ணப்பிக்கவும், புதுப்பிக்கவும் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசின் நிதி திட்டமான 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கான, ப்ரி போஸ்ட் மெட்ரிக் திட்ட விண்ணப்ப இணையதளமும் திறக்கப்பட்டுள்ளது.

கல்வி உதவித்தொகை கோரும் விண்ணப்பங்களை முறையாக பூர்த்தி செய்து ஜாதிச்சான்று, வருமானசான்று, மதிப்பெண் சான்று, வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல், ஆதார் எண் உள்ளிட்ட ஆவணங்களுடன் வருகிற 13-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். கல்வி நிறுவனங்கள் அதற்காக உதவியை வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
Tags:    

Similar News