உள்ளூர் செய்திகள்
சென்னை வந்த மத்திய குழு

ஒமைக்ரான் பரவல் குறித்து ஆய்வு - சென்னை வந்தடைந்தது மத்திய குழு

Published On 2021-12-27 00:15 GMT   |   Update On 2021-12-27 00:15 GMT
மத்திய குழுவில் மத்திய சுகாதாரத் துறையை சேர்ந்த வல்லுனர்கள் டாக்டர் வினிதா, டாக்டர் புர்பசா, டாக்டர் சந்தோஷ்குமார், டாக்டர் தினேஷ்பாபு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சென்னை:

தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்பட 17 மாநிலங்களில் பரவியுள்ளது. 

இதற்கிடையே, ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி சமீபத்தில் ஆலோசனை நடத்தி இருந்தார். அப்போது ஒமைக்ரான் பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களுக்கு பன்னோக்கு குழுக்களை அனுப்பி வைப்பதாக தெரிவித்தார். அதன்படி தமிழ்நாடு உள்பட 10 மாநிலங்களுக்கு மத்திய குழு வருகிறது.

இந்தக் குழுவில் மத்திய சுகாதாரத் துறையை சேர்ந்த வல்லுனர்கள் டாக்டர் வினிதா, டாக்டர் புர்பசா, டாக்டர் சந்தோஷ்குமார், டாக்டர் தினேஷ்பாபு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், ஒமைக்ரான் வைரஸ் பரவல் குறித்து ஆய்வுசெய்ய மத்திய நிபுணர் குழு நேற்று இரவு சென்னை வந்தடைந்தது.

இந்த குழு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் சென்று ஆய்வு நடத்த உள்ளனர்.
தமிழகத்தில் 5 நாட்கள் வரை தங்கி இருந்து மாநில சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து ஒமைக்ரான் மற்றும் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை செய்வார்கள்.

ஒமைக்ரான் பாதித்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், வெண்டிலேட்டர் வசதிகள், மருத்துவ ஆக்சிஜன் ஆகியவற்றின் இருப்புகள் உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்பு வசதிகளை கண்டறிந்து ஆய்வுசெய்து மத்திய அரசுக்கு அறிக்கையை அனுப்பி வைக்க உள்ளனர்.

Tags:    

Similar News