பயிர்க்கடன் பெறுவது குறித்து கிராமங்களில் நோட்டீஸ்கள் வினியோகம் செய்யப்பட்டது.
விவசாயிகளுக்கான பயிர்க்கடன் குறித்து விழிப்புணர்வு பிரசாரம்
பதிவு: டிசம்பர் 25, 2021 12:36 IST
கோப்புபடம்
மடத்துக்குளம்:
கூட்டுறவு துறை சார்பில் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சரகத்திற்குட்பட்ட உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில் செயல்படும் 55 கூட்டுறவு கடன் சங்கங்களிலும் கே.சி.சி., பயிர்க்கடன் மேளா நடந்தது.
பிரசார வாகனங்கள் வாயிலாக கிராமங்களில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. விவசாயிகளுக்கு தனி நபருக்கு ரூ.1.60 லட்சம் வரையிலும், அடமானத்தின் பேரில் ரூ. 3 லட்சம் வரை பயிர்க்கடன் பெறலாம்.
பயிர்க்கடன் பெறுவது குறித்து கிராமங்களில் நோட்டீஸ்கள் வினியோகம் செய்யப்பட்டது. பயிர்கடன் பெற்று சாகுபடியை பெருக்கவும், விவசாயிகள் நலன் காக்கவும், விழிப்புணர்வு பணியில் கூட்டுறவு துறை அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு சங்க அலுவலர்கள் பங்கேற்றனர்.
Related Tags :