உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்களுக்கு அனுமதி மறுப்பு - அரசிடம் முறையிடம் முடிவு

Published On 2021-12-25 05:11 GMT   |   Update On 2021-12-25 05:11 GMT
துணை தலைவராக லோகநாதன், ராபர்ட், இணை செயலாளர்களாக கதிரேசன், அருண்பிரசாத் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
திருப்பூர்:

திருப்பூர் பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்க (டிப்மா) பொதுக்குழு கூட்டம்  அவிநாசி சாலையில் உள்ள திருப்பூர் கிளப்பில் நடந்தது.  

இதில் புதிய தலைவராக சண்முகம், செயலாளராக சிவக்குமார், பொருளாளராக செல்வராஜ், செயல் தலைவராக பெரிய கருப்பன், துணை தலைவராக லோகநாதன், ராபர்ட், இணை செயலாளர்களாக கதிரேசன், அருண்பிரசாத் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

கூட்டத்தில், திருப்பூர் பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள நிறுவனங்கள், பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களுக்காக 50 மைக்ரானுக்கு அதிகமான பாலிபேக்குகளை மட்டுமே தயாரிக்கின்றன. 

மாசுகட்டுப்பாடு வாரியம் புதிய பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்களுக்கு இயக்க அனுமதி வழங்க மறுக்கிறது. இது குறித்து தமிழக அரசிடம் முறையிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Tags:    

Similar News