உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

ஜவுளிக்கடைகளில் தொழிலாளர்களுக்கு இருக்கை வசதி செய்யாவிட்டால் நடவடிக்கை- அதிகாரிகள் எச்சரிக்கை

Published On 2021-12-22 09:45 GMT   |   Update On 2021-12-22 09:45 GMT
வணிகர்கள், உதவியாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் தொழிலாளருக்கு இருக்கை வசதி செய்து கொடுக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
திருப்பூர்:

ஜவுளிக்கடை உட்பட பல்வேறு கடைகள் மற்றும் நிறுவனங்களில் தொழிலாளருக்கு இருக்கை வசதி அளிப்பதில்லை. இந்நிலையில் அனைவருக்கும் இருக்கை வசதியை அனுமதிக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

கடந்த அக்டோபர் மாதம் சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது. எனவே அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு போதிய இருக்கை வசதி செய்து கொடுக்க வேண்டும். 

இருக்கை வசதி செய்தது குறித்து தொழிலாளர் துறை அலுவலர்கள் தொடர் ஆய்வு நடத்த உள்ளனர்.

இந்நிலையில் வணிகர்கள், உதவியாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் தொழிலாளருக்கு இருக்கை வசதி செய்து கொடுக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. 

இதுகுறித்து திருப்பூர் தொழிலாளர் உதவி கமிஷனர் மலர்க்கொடி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நிறுவனம், கடைகள் என அனைத்து இடங்களிலும் தொழிலாளருக்கு இருக்கை வசதி செய்து கொடுக்க வேண்டும்.தொழிலாளர்துறை ஆய்வின் போது இருக்கை வசதி செய்யப்படாதபட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.  

அனைத்து தொழிலாளருக்கும் இருக்கை வசதி ஏற்படுத்தி கொடுத்து அரசின் அமலாக்க அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News