உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

இல்லம் தேடி கல்வி திட்டம் - தன்னார்வலர்களுக்கு கருத்தாளர் பயிற்சி

Published On 2021-12-22 05:59 GMT   |   Update On 2021-12-22 05:59 GMT
மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் கணேஷ்வரி, திருப்பூர் வடக்கு வட்டார கல்வி அலுவலர் விஸ்வநாதன் முகாமை தொடங்கி வைத்தனர்.
திருப்பூர்:

1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட மாலை நேர சிறப்பு வகுப்பே ‘இல்லம் தேடி கல்வி’ திட்டம். இதற்கான தன்னார்வலர்களை இணைக்க திருப்பூரில் 13 ஒன்றியங்கள் முறையே 117 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான பயிற்சிகள் ஏற்கனவே வழங்கப்பட்ட நிலையில் தற்போது மாவட்ட அளவில் தன்னார்வலர்களுக்கான கருத்தாளர் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் கணேஷ்வரி, திருப்பூர் வடக்கு வட்டார கல்வி அலுவலர் விஸ்வநாதன் முகாமை தொடங்கி வைத்தனர். 

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் (பொறுப்பு) 158 கருத்தாளர்களுக்கு பயிற்சி வழங்கினார். இதனை கலெக்டர் வினீத், முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் நேரில் ஆய்வு செய்தனர்.
Tags:    

Similar News