உள்ளூர் செய்திகள்
அமைச்சர் ராஜகண்ணப்பன்

நெல்லை பள்ளி விபத்து - தாளாளர் உள்பட 3 பேர் கைது

Published On 2021-12-17 18:08 GMT   |   Update On 2021-12-17 18:08 GMT
நெல்லையில் பள்ளி கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்ததை தொடர்ந்து டிசம்பர் 26 வரை அந்தப் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை:

நெல்லை டவுன் எஸ்.என். ஹைரோடு பொருட்காட்சி மைதானம் எதிரே உள்ள சாப்டர் மேல்நிலைப் பள்ளியின் கழிவறை தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததில் 3 மாணவர்கள் பலியாகினர். 4 மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

உயிரிழந்த 3 மாணவர்களின் உடல்களுக்கு சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் ராஜகண்ணப்பன், எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன், அப்துல் வகாப் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், நெல்லை பள்ளி விபத்து தொடர்பாக பள்ளியின் தாளாளர் சாலமன் செல்வராஜ், தலைமையாசிரியை ஞான செல்வி மற்றும் கட்டிட ஒப்பந்ததாரர் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்யப்பட்டுள்ளனர் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News