உள்ளூர் செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட போதை சாக்லெட்டுகளை காணலாம்

தமிழகம் முழுவதும் போலீஸ் வேட்டை தொடர்கிறது- 30 கிலோ போதை சாக்லெட்டுகள் பறிமுதல்

Published On 2021-12-14 03:24 GMT   |   Update On 2021-12-14 03:24 GMT
தமிழகம் முழுவதும் போதைப்பொருட்கள் பறிமுதல் வேட்டை தொடர்வதாகவும், கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த 30 கிலோ போதை சாக்லெட்டுகள் கைப்பற்றப்பட்டதாகவும், போலீசார் தெரிவித்தனர்.
சென்னை:

போதைப்பொருட்கள் விற்பனையை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதன்பேரில் தமிழகம் முழுவதும் போதைப்பொருட்கள் விற்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

கடந்த ஒரு வாரத்தில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 239 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 324 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ரெயிலில் கடத்தி வரப்பட்ட 75 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் கைப்பற்றினார்கள். ரூ.164 கோடி மதிப்புள்ள குட்கா போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 2,983 பேர் கைதாகி உள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 30 கிலோ போதை சாக்லெட்டுகள் கைப்பற்றப்பட்டது. தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றதாகவும், 134 பேர் சிக்கினார்கள்.
Tags:    

Similar News