உள்ளூர் செய்திகள்
கலெக்டர் வினீத் கொடி நாள் வசூல் வழங்கி தொடங்கி வைத்த காட்சி.

திருப்பூர் மாவட்டத்தில் கொடி நாள் வசூல்- கலெக்டர் தொடங்கி வைத்தார்

Published On 2021-12-07 08:13 GMT   |   Update On 2021-12-07 08:13 GMT
கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் படைவீரர் கொடி நாள் உண்டியல் வசூல் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பூர்:

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 7-ந்தேதி இந்தியா முழுவதும் கொடி நாள் அனுசரிக்கப்படுகிறது. வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த இந்த நாளில் அரசு முன்னாள் படைவீரர்களுக்கு அவர்கள் ஆற்றிய தொண்டுகளை நினைவு கூர்ந்து நன்றி பாராட்டி வருகிறது.

கொடி நாளில் திரட்டப்படும் நிதியானது போர்க்களத்தில் உயிர்நீத்த படை வீரர்களின் கைம்பெண்கள், ஊனமுற்ற படை வீரர்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரது விதவைகளின் மறுவாழ்வுக்காகவும், நலத்திட்டங்களுக்காகவும் பயன்படுத்தப்படுவதால் பொதுமக்கள் அனைவரும் நிதியுதவியை வாரி வழங்கும்படி திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்திருந்தார்.

அதன்படி திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று முன்னாள்  படைவீரர் நலத்துறையின் சார்பில் படைவீரர் கொடி நாள் உண்டியல் வசூல் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலெக்டர் வினீத் கொடி நாள் வசூல் வழங்கி தொடங்கி வைத்தார்.
Tags:    

Similar News