உள்ளூர் செய்திகள்
திருப்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை போலீசார் சோதனை செய்த காட்சி.

பாபர் மசூதி இடிப்புதினத்தையொட்டி திருப்பூர் ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் அதிரடி சோதனை

Published On 2021-12-05 10:02 GMT   |   Update On 2021-12-05 10:02 GMT
பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் மற்றும் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
திருப்பூர்:

நாளை 6-ந்தேதி பாபர்மசூதி இடிப்புதினத்தையொட்டி திருப்பூர் மாநகரம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா உத்தரவின் பேரில் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்கிறார்கள்.

சோதனைச்சாவடிகளில் 24 மணி நேரமும் வாகனங்கள் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. பழைய பஸ் நிலையம், புதிய பஸ்  நிலையம் மற்றும் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில்  ஈடுபடுகின்றனர்.

திருப்பூர் ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகளின் உடைமைகளை ரெயில்வே  போலீசார் சோதனை செய்து அதன் பிறகே அனுமதிக்கிறார்கள். மேலும் போதை பொருட்கள் தடுப்பு நடவடிக்கையாக ரெயில் நிலைய வளாகத்தில் தங்கியிருந்தவர்களிடம் போலீசார் சோதனை நடத்தினர். அவர்கள் கஞ்சா உள்ளிட்ட போதை பொருடகள் வைத்துள்ளனரா? என்று ஆய்வு செய்யப்பட்டது. 
Tags:    

Similar News