உள்ளூர் செய்திகள்
சாலை சீரமைப்பு பணியை கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ., ஆய்வு செய்த காட்சி.

மாலைமலர் செய்தி எதிரொலி - மழையால் சேதமான சாலை சீரமைப்பு

Update: 2021-12-03 10:04 GMT
பிச்சம்பாளையம் பஸ்நிறுத்தம் டீச்சர்ஸ் காலனி மெயின் வீதியில் மழையால் சாலையில் அரிப்பு ஏற்பட்டது.
திருப்பூர்:

திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட  பிச்சம்பாளையம் பஸ்நிறுத்தம் டீச்சர்ஸ் காலனி மெயின் வீதியில் மழையால் சாலையில் அரிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வந்தனர். எனவே சாலையை சீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். மேலும் மாலைமலரிலும் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. 

இந்தநிலையில் திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமார் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன் பேரில் இன்று மாநகராட்சியின் மூலமாக சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

அதனை கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். அப்போது முன்னாள் மண்டல தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் சபரீஸ்வரன், மாநகராட்சி உதவி பொறியாளர் அமல்ராஜ் உள்பட பலர் உடனிருந்தனர்.
Tags:    

Similar News