உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

திருப்பூரில் தேசிய புத்தக கண்காட்சி

Published On 2021-12-03 04:32 GMT   |   Update On 2021-12-03 04:32 GMT
வாசகர்களுக்கு 10 சதவீதமும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 30 சதவீதம் வரையில் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுவதாக கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
திருப்பூர்:

திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகில் நேஷனல் புக் டிரஸ்ட், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ஆகியன சார்பில் ஒவ்வொரு ஆண்டும் புத்தகக் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். இதன்படி திருப்பூரில் நடப்பு ஆண்டு 36-வது தேசிய புத்தக கண்காட்சி செவ்வாய்க்கிழமை தொடங்கி உள்ளது.

தொடக்க விழாவுக்கு திருப்பூர் கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் கீதாஞ்சலி கோவிந்தப்பன் தலைமை வகித்தார். கண்காட்சியை திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் செல்வராஜ் தொடக்கி வைத்தார். இதில் முதல் விற்பனையை காங்கிரஸ் மாநகர் மாவட்டத்தலைவர் கிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

கண்காட்சியில் அறிவியல், மருத்துவம், வரலாறு, சரித்திரம், போட்டித்தேர்வுகள், சட்ட நூல்கள், பொது அறிவு, சிறுகதை, கவிதை, நாவல்கள், கல்வி அறிஞர்கள், பிரபல எழுத்தாளர்களின் நூல்கள் என மொத்தம் 12 ஆயிரம் தலைப்புகளில் நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இக்கண்காட்சியானது 2022 ஜனவரி 15-ந்தேதி வரையில் நாள்தோறும் காலை 9.30 மணி முதல் இரவு 9 மணி வரையில் நடைபெற உள்ளது. மேலும், வாசகர்களுக்கு 10 சதவீதமும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 30 சதவீதம் வரையில் சிறப்புத்தள்ளுபடி வழங்கப்படுவதாக கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News