உள்ளூர் செய்திகள்
பூண்டி ஏரி

பூண்டி ஏரியில் தண்ணீர் திறப்பு மேலும் குறைப்பு

Published On 2021-12-01 09:10 GMT   |   Update On 2021-12-01 09:10 GMT
பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை நீர்மட்டம் 34.12 அடியாக பதிவானது.
ஊத்துக்கோட்டை:

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகமானது.

பள்ளிப்பட்டு அருகே உள்ள அம்மப்பள்ளி அணையில் இருந்தும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை நீர்வரத்து வினாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக இருந்தது. ஏரியில் இருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்துவிடப்படுகிறது.

கடந்த 3 நாட்களுக்கு முன் அதிகபட்சமாக வினாடிக்கு 26 ஆயிரம் கனஅடி வீதம் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை நீர்மட்டம் 34.12 அடியாக பதிவானது. 2.841 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

Tags:    

Similar News