உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல்: தமிழகம் வரும் விமான பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடு

Published On 2021-12-01 04:31 GMT   |   Update On 2021-12-01 04:31 GMT
விமானம் மூலம் தமிழகம் வரும் பயணிகள் 7 நாட்கள் தனிமைப்படுத்துதல் உள்பட 14 நாட்கள் கண்காணிப்பில் இருக்க பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி (இரண்டு டோஸ்) கண்டுபிடித்து,  பெரும்பாலான மக்களுக்கு செலுத்தப்பட்டு, தொற்றில் இருந்து விரைவில் விடுதலை என மக்கள் நம்பியிருந்த நிலையில், ஒமிக்ரான் என்ற உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது.

இந்த ஒமிக்ரான் வைரஸ் மிகக் கொடூரமானது எனவும், அதிவேகத்தில் பரவக்கூடியது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்தநிலையில் தமிழக பொது சுகாதாரத்துறையும் ஒமிக்ரானுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்திற்கு வரும் விமான பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயம். 7 நாட்கள் தனிமைப்படுத்துதல் உள்பட 14 நாட்கள் காண்காணிப்பில் இருக்க வேணடும் என உத்தரவிட்டுள்ளது.
Tags:    

Similar News