செய்திகள்
கோப்புபடம்

டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

Published On 2021-11-28 04:59 GMT   |   Update On 2021-11-28 04:59 GMT
திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருப்பூர்:

பிரதமர் அறிவித்தபடி பாராளுமன்ற  குளிர்கால கூட்டத்தொடரில் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும். அனைத்து வேளாண் பொருட்களுக்கும், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும்.

மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும். போராட்டத்தில் உயிரிழந்த விவசாயி குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி திருப்பூர்  கலெக்டர் அலுவலகம் முன்பு ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமார் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் மதுசூதனன், தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் காளிமுத்து, உழவர் உழைப்பாளர் கட்சி மாவட்ட தலைவர் ஈஸ்வரமூர்த்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சின்னசாமி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சுப்பிரமணியம் பேசினர்.
Tags:    

Similar News