செய்திகள்
வானிலையின் நிலவரப் படம்

தமிழகத்தில் இன்று உருவாகாது: அந்தமான் அருகே 29-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

Published On 2021-11-25 07:40 GMT   |   Update On 2021-11-25 09:01 GMT
தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால், 12 மணி நேரத்தில் இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும் என வானிலை ஆய்வு மையம் இன்று காலை தெரிவித்தது.

இதன் எதிரொலியால், தென் தமிழகம், கடலோர மாவட்டங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், இதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரெஞ்சு அலெர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், நவம்பர் 29-ம் தேதி அன்று அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இது 2 நாளில் வடமேற்கு திசையில் நகர்ந்து செல்லும் எனவும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.  இது பிறகு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறுமா என்பது குறித்து பின்னர் தெரியவரும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்.. தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை
Tags:    

Similar News