செய்திகள்
கோப்புபடம்

பி.ஏ.பி.,வாய்க்காலில் குப்பைகள் கொட்டுவது தடுக்கப்படுமா - பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Published On 2021-11-19 07:18 GMT   |   Update On 2021-11-19 07:18 GMT
தற்போது மழை பெய்து வருவதால் குப்பைகளில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி பெரும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் சர்வசாதாரணமாக விற்பனை செய்யப்படுகிறது. இதனால் எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் கவர் மயமாக காட்சி அளிக்கிறது. 

பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குப்பைகளை பி.ஏ.பி., வாய்க்கால் மற்றும் பொது இடங்களில் கொட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். ஒரு சிலர் ஊருக்கு நடுவில் குப்பைகளை கொட்டுவதால் அதில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அருகில் வசித்து வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

தற்போது மழை பெய்து வருவதால் குப்பைகளில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி பெரும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவுவதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள் விற்பனையை தீவிரமாக கண்காணித்து குப்பைகளை பொது இடங்கள், பி.ஏ.பி., வாய்க்காலில் கொட்டுவதை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Tags:    

Similar News