செய்திகள்
கோப்புபடம்

திருப்பூரில் மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.5 கோடி மதிப்புள்ள திருமண மண்டபத்துக்கு ‘சீல்’

Published On 2021-11-17 10:09 GMT   |   Update On 2021-11-17 10:09 GMT
மாநகராட்சிக்கு சொந்தமான 20 சென்ட் நிலத்தை அப்பகுதியைச் சேர்ந்த சிலார் ஆக்கிரமித்து திருமண மண்டபம் அமைத்து வாடகைக்கு விட்டு வந்ததாக கூறப்படுகிறது.
திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சி 60ஆவது வார்டுக்கு உள்பட்ட ஆண்டிபாளையம் எஸ்.ஆர்.நகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான 20 சென்ட் நிலத்தை அப்பகுதியைச் சேர்ந்த சிலார் ஆக்கிரமித்து திருமண மண்டபம் அமைத்து வாடகைக்கு விட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்துக்கு புகார் வந்ததையடுத்து மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் உத்தரவின்பேரில் 4ஆவது மண்டல அலுவலர்கள், வருவாய்த் துறையினர் உள்ளிட்டோர் காவல் துறையினரின் பாதுகாப்புடன் ரூ.5 கோடி மதிப்புள்ள மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த திருமண மண்டபத்துக்கு ‘சீல்’ வைத்தனர்.
Tags:    

Similar News