செய்திகள்
எஸ்.பி.யிடம் மனு கொடுத்த பொதுமக்கள்.

திருப்பூர் பொதுமக்களிடம் ரூ.3 கோடி மோசடி-எஸ்.பி.யிடம் கண்ணீர் மல்க புகார்

Published On 2021-11-08 10:05 GMT   |   Update On 2021-11-08 10:05 GMT
எஸ்.பி. சசாங்சாய் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களிடம் புகார் மனுவை பெற்றுக்கொண்டார்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர்   காசிநாதன். இவரது மனைவி ராக்கம்மாள். இவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் லோகேஷ்குமார், சக்திவேல் ஆகியோர் பல்லடத்தில்ரியல்எஸ்டேட், தறி எந்திரம் வாங்குதல் மற்றும் விற்பனை செய்வது, ஏலச்சீட்டு நடத்துவது உள்ளிட்ட தொழில்கள் நடத்தி வந்துள்ளனர்.

மேலும் அப்பகுதி பொதுமக்களிடம் பழகி வந்த அவர்கள் தொழிலை விரிவுப்படுத்துவதற்காக பலரிடம்   கடன் வாங்கியதாக தெரிகிறது. சுமார் ரூ.3கோடியே  63 லட்சம் வரை  வாங்கினராம். ஆனால் அதனை மீண்டும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளதாக கடன் கொடுத்த பொதுமக்கள்  புகார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தரக்கோரி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் திருப்பூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்திற்கு  வந்தனர். அப்போது அங்கு வந்த எஸ்.பி.சசாங்சாய்  பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களிடம் புகார் மனுவை பெற்றுக்கொண்டார்.

அப்போது பொதுமக்கள் கண்ணீர் மல்க புகார் தெரிவித்தனர். பணத்தை பெற்றுதரும்படியும் கேட்டுக்கொண்டனர். அப்போது நடவடிக்கை எடுப்பதாக எஸ்.பி.,உறுதியளித்தார்.
Tags:    

Similar News