செய்திகள்
கோமதியை டி.ஐ.ஜி. முத்துசாமி நேரில் பாராட்டி பரிசு வழங்கியபோது எடுத்தப்படம்

கருமத்தம்பட்டி அருகே கொள்ளையர் பற்றி தகவல் சொன்ன பெண்ணுக்கு டி.ஐ.ஜி. நேரில் பாராட்டு

Published On 2021-11-05 14:02 GMT   |   Update On 2021-11-05 14:02 GMT
கருமத்தம்பட்டி அருகே திருட்டு சம்பவம் குறித்து தகவல் அளித்த கோமதி மற்றும் குடும்பத்தினருக்கு டிஐஜி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து இனிப்பு மற்றும் பரிசு வழங்கினார்.
கருமத்தம்பட்டி:

கருமத்தம்பட்டி அடுத்த செந்தில் நகர் பகுதியைச் சேர்ந்த நிர்மலா (வயது 40) என்பவரின் வீட்டில் யில் கடந்த 1-ந் தேதி இரவு புகுந்த மர்மநபர்கள் கதவை உடைத்து கொள்ளையடித்துக் கொண்டு இருந்தனர்.

அந்த சத்தத்தை கேட்டு பக்கத்து வீட்டைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் மனைவி கோமதி வெளியே வந்து பார்த்தார்.

அப்போது மர்ம நபர்கள் கதவை உடைத்து திருடுவது பற்றி தெரிந்து கொண்ட அவர் உடனடியாக கருமத்தம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் கருமத்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அங்கு கொள்ளையடித்துக் கொண்டு இருந்த முன்னாள் ஆயுதப்படை போலீஸ்காரரான முனீஸ்வரன் என்பவரை பொதுமக்களுடன் சேர்ந்து கையும் களவுமாக பிடித்தனர். மற்றொரு நபர் தப்பி சென்றார்.

இதனை அடுத்து திருட்டு சம்பவம் குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்ததற்கு வாழ்த்து தெரிவிக்க டி.ஐ.ஜி முத்துச்சாமி சம்பவம் நடந்த பகுதிக்கு நேரில் வந்தார். அவர் திருட்டு சம்பவம் குறித்து தகவல் அளித்த கோமதி மற்றும் குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவித்து இனிப்பு மற்றும் பரிசு வழங்கினார்.

திருட்டுச் சம்பவம் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து தகவல் தெரிவிப்பவர்கள் ரகசியங்கள் காக்கப்படும் எனவும், இதனால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் டி.ஐ.ஜி. முத்துசாமி தெரிவித்தார். மேலும் குற்றச் சம்பவங்களை தடுக்கவும், குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்யவும் பொதுமக்களும் போலீசாருடன் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
Tags:    

Similar News