செய்திகள்
திருப்பூர் வளம்பாலம் அருகில் உள்ள கல்லறை தோட்டத்தில் கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

திருப்பூரில் கல்லறை திருநாள் சிறப்பு பிரார்த்தனை

Published On 2021-11-02 08:31 GMT   |   Update On 2021-11-02 08:31 GMT
பொதுமக்கள் தங்களது மூதாதையர்கள், உறவினர்களின் கல்லறைகளை சீரமைத்து, மெழுகுவத்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.
திருப்பூர்:

ஆண்டுதோறும் நவம்பர் 2-ந்தேதி கல்லறைத் திருநாள் கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி இன்று  கல்லறைத் திருநாள் அனுசரிக்கப்பட்டது. 

இதையொட்டி திருப்பூர் மாவட்டத்தில்  கல்லறைத் தோட்டங்களில் உள்ள தங்களது முன்னோர்களின் கல்லறைகளில் மெழுகுவர்த்தி ஏற்றியும், மாலைகள் அணிவித்தும் கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். 

சிலர் அன்னதானம் வழங்கினர். அருட்தந்தையர்கள், போதகர்கள் பங்கேற்ற சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் மாவட்டத்தில் அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

பொதுமக்கள் தங்களது மூதாதையர்கள், உறவினர்களின் கல்லறைகளை சீரமைத்து, மெழுகுவத்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர். இதனால் மாவட்டத்தில்  உள்ள அனைத்து கல்லறைத் தோட்டங்களிலும் பொதுமக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது.

கல்லறைத்திருநாளையொட்டி திருப்பூர் வளம்பாலம் அருகில் உள்ள கல்லறை தோட்டத்தில் கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News