செய்திகள்
பல்லடம்-கொச்சின் சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மரக்கன்று நடப்பட்ட போது எடுத்த படம்.

பல்லடத்தில் புதிய சாலைகளை அதிகாரிகள் ஆய்வு

Published On 2021-10-29 08:38 GMT   |   Update On 2021-10-29 08:38 GMT
சாலையை பசுமை சாலையாக மாற்றும் வகையில் சாலையின் ஓரங்களில் மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைக்கப்பட்டது.
பல்லடம்:

திருப்பூர் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலைகளை தமிழக நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் சந்திரசேகரன் ஆய்வு செய்தார். அந்த வகையில் பல்லடம்-கொச்சின் எல்லை சாலையில் புதிதாக அமைத்த சாலையின் தரத்தினை ஆய்வு செய்தார்.

மேலும் இந்த சாலையை பசுமை சாலையாக மாற்றும் வகையில் சாலையின் ஓரங்களில் மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல்லடம்-தாராபுரம் சாலைக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

அந்த சாலையையும் அவர் ஆய்வு செய்து அறிவுரைகள் கூறினார். இந்த நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர், கோட்ட பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
Tags:    

Similar News