செய்திகள்
கோப்புபடம்

பாதுகாப்பு பணிக்காக பசும்பொன் சென்ற போலீசார் - திருப்பூரில் தீபாவளி கூட்ட நெரிசலை சமாளிப்பதில் சிக்கல்

Published On 2021-10-28 06:49 GMT   |   Update On 2021-10-28 06:49 GMT
திருப்பூர் மாநகரில் தீபாவளி பண்டிகைக்காக ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காக பஜார்களில் பொதுமக்கள் குவிகின்றனர்.
திருப்பூர்:

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவர் குரு பூஜை மற்றும் ஜெயந்தி விழா இன்று முதல் 30-ந்தேதி வரை நடக்கிறது. இதற்காக தமிழகம் முழுவதும் இருந்து போலீசார் பாதுகாப்பு பணிக்காக செல்கின்றனர்.

அதன்படி திருப்பூர் மாநகரில் துணை கமிஷனர், 2 உதவி கமிஷனர்கள், 5  இன்ஸ்பெக்டர்கள், 15 எஸ்.ஐ.,க்கள் என 170 போலீசார் மற்றும் மாவட்டத்தில்2 டி.எஸ்.பி., 5 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 250 பேர் என 420 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட தனித்தனி போலீஸ் வேன்களில் திருப்பூரில் இருந்து புறப்பட்டு சென்றனர். 

திருப்பூர் மாநகரில் தீபாவளி பண்டிகைக்காக ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்காக பஜார்களில் பொதுமக்கள் குவிகின்றனர். இதனால் திருப்பூரில் கூட்ட நெரிசலை சமாளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

திருப்பூர் குமரன் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்  ஏற்பட்டுள்ளது. மேலும் சில இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடாமல் உள்ளனர். இதனால் அங்கு விதிமுறைகளை மீறி வாகன ஓட்டிகள் செல்கின்றனர். 
Tags:    

Similar News