செய்திகள்
கோப்புப்படம்

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு: உயர்கல்வித்துறை உத்தரவு

Published On 2021-10-26 11:07 GMT   |   Update On 2021-10-26 11:23 GMT
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டில் காலியான இடங்கள் இருந்தால், அதை இதர பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களை கொண்டு நிரப்ப உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கல்லூரி, பல்கலைக்கழகங்களில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் சேர்க்கையின்போது  இடஒதுக்கீட்டில் காலியான இடங்கள் இருந்தால் சுழற்சி முறையில் இதர பிரிவு மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்ட நிலையில், 10.5 சதவீத ஒதுக்கீட்டில் காலி இடங்கள் இருந்தால் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களை கொண்டு நிரப்ப உயர்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.
Tags:    

Similar News