செய்திகள்
கோப்புபடம்

தாராபுரத்தில் 2 மணிநேரம் இடைவிடாமல் பெய்தது - மழை நீருடன் சாக்கடையும் கலந்து வெளியேறியதால் சுகாதார சீர்கேடு

Published On 2021-10-24 08:17 GMT   |   Update On 2021-10-24 08:17 GMT
சுமார் 2 மணி நேரம் இடைவிடாமல் மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
தாராபுரம்:

தாராபுரத்தில் நேற்று பகலில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், பகல் 1மணி அளவில் கருமேகங்கள் சூழ்ந்து  பலத்த மழை பெய்தது. மேலும் தாராபுரம் குண்டடம், மூலனூர், உப்பாறு அணை ஆகிய பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது. 

சுமார் 2 மணி நேரம் இடைவிடாமல் மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. என்.ஜி.ஒ காலனி, சங்கர்மில் பின்புறம்,காலேஜ் ரோடு, பொள்ளாச்சி சாலை ஆகிய பகுதிகளில் சாக்கடையுடன் கலந்து தண்ணீர் வெளியேறியது. 

பின்னர் மாலை 6 மணிக்கு மேல் விட்டுவிட்டு மழை பெய்தது. இந்த மழை இரவு 9 மணிவரை நீடித்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை ஏற்பட்டது. 

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக பல இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. சில தினங்களுக்கு முன்பு உடுமலை பகுதியில் மழை அதிக அளவு பெய்தது. நேற்று தாராபுரத்தில் பெய்துள்ளது.
Tags:    

Similar News