செய்திகள்
படகுகள்

நெல்லை, தூத்துக்குடியில் 3-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

Published On 2021-10-16 04:34 GMT   |   Update On 2021-10-16 04:34 GMT
நெல்லை மாவட்டத்தில் கூத்தங்குழி, கூடுதாழை, பெருமணல், கூட்டப்புளி, இடிந்தகரை உள்பட 10 மீனவ கிராமங்களில் உள்ள சுமார் 8 ஆயிரம் நாட்டு மீனவர்கள் இன்றும் 3-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.
நெல்லை:

மன்னார்வளைகுடா பகுதியில் பலத்த சூறைக்காற்று காரணமாக கடந்த 14-ந் தேதி முதல் இன்று வரை மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதைத்தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் கூத்தங்குழி, கூடுதாழை, பெருமணல், கூட்டப்புளி, இடிந்தகரை உள்பட 10 மீனவ கிராமங்களில் உள்ள சுமார் 8 ஆயிரம் நாட்டு மீனவர்கள் இன்றும் 3-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.

இதனால் 2 ஆயிரம் நாட்டுப்படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்திலும் தருவைகுளம், வேம்பார், தாளமுத்துநகர், திரேஸ்புரம், இனிகோநகர், தெர்மல்நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 400 விசைப்படகுகளை சேர்ந்த 10 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் படகுகள் மீன்பிடி துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News