செய்திகள்
டி.டி.வி.தினகரன்

அப்துல்கலாம் பிறந்தநாள்: டி.டி.வி.தினகரன் புகழாரம்

Published On 2021-10-15 08:57 GMT   |   Update On 2021-10-15 08:57 GMT
சாமானியராக பிறந்து சரித்திர சாதனைகள் புரிந்த மாமேதை கலாமின் நினைவுகளைப் போற்றி வணங்கிடுவோம் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
சென்னை:

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

‘சாதிக்க வேண்டும்’ என்ற கனவும், ‘உறுதியாக சாதிப்போம்’ என்கிற நம்பிக்கையும், அதற்கான ஓயாத உழைப்பும் நிச்சயம் வெற்றியைப் பெற்று தரும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்த ஏவுகணை நாயகர்.

எல்லோருக்கும் பிடித்த இந்திய முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாமின் பிறந்த நாள் இன்று.

சாமானியராக பிறந்து சரித்திர சாதனைகள் புரிந்த மாமேதை கலாமின் நினைவுகளைப் போற்றி வணங்கிடுவோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News