செய்திகள்
நிகழ்ச்சியில் ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்ட காட்சி.

உடுமலையில் ஐம்பெரும் விழா

Published On 2021-10-04 09:26 GMT   |   Update On 2021-10-04 09:26 GMT
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடுமலை நாராயணகவி இலக்கிய பேரவையின் பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.
உடுமலை:

பகுத்தறிவு கவிராயர் உடுமலை நாராயணகவியின் 123-வது பிறந்தநாள் விழா, மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாள் விழா, மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா, உடுமலை நாராயணகவி இலக்கிய பேரவையின் 28ம் ஆண்டு தொடக்க விழா, தொண்டில் தூயோர் விருது வழங்கும் விழா உடுமலை தேஜஸ் மகாலில் நடந்தது.

நிகழ்ச்சியானது பா. உமா நந்தினியின் தமிழ் தாய் வாழ்த்துடன்  தொடங்கியது. உடுமலை நாராயணகவி இலக்கிய பேரவை தலைவர் உடுமலை அமிர்தநேயன் தலைமை வகித்தார். செயலாளர் கவிஞர் ஜெயசிங் லிங்க வாசகம் வரவேற்று பேசினார்.

உடுமலை நாராயணகவியின் மைந்தர் நா.முத்துசாமி முன்னிலை வகித்தார். உடுமலை நாராயணகவியின் பேரன் வழக்கறிஞர் சுந்தரராஜன், அரிமா மண்டல தலைவரும்  உடுமலை ஒருங்கிணைப்பாளருமான ஸ்ரீ வர்ஷினி எம். ஆர் .இளங்கோவன் ,கல்லாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் மஞ்சுளாதேவி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

வக்கீல் சாஸ்திரி சீனிவாசன் மகாகவியும் நாராயணகவியும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இதில் முனைவர் இந்திரஜித்தின் நினைவு இலக்கிய விருது, 2021 உணர்ச்சி எழுத்தாளர் உடுமலை பழனியப்பனுக்கு  வழங்கப்பட்டது. அதனை இந்திரஜித்தின் துணைவியார் வளர்மதி வழங்கினார்.

தொண்டில் சிறந்த தூயோர் விருதானது  உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் விஜயலட்சுமி,  உடுமலை பாரதியார் நூற்றாண்டு மகளிர் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சின்னராசு,  ராகல்பாவி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி இடைநிலை ஆசிரியர் கண்ணபிரான், ஸ்ரீ விசாலாட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி முதுகலை தமிழாசிரியர் சுதா,  குறிச்சிக்கோட்டை முதுகலை பொருளாதார ஆசிரியை ரேணுகாதேவி , உடுமலை கிளை நூலகம் எண் 2  நூலகத்தின் நூலகர் வீ.கணேசன், தேவார இசைப்பாடகி  உமா நந்தினி  ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடுமலை நாராயணகவி இலக்கியப் பேரவையின் பொறுப்பாளர்கள் தலைவர் உடுமலைஅமிர்த நேயன், செயலாளர்  ஜெய்சிங்லிங்கவாசகம் ,பொருளாளர்  சீதாராமன், துணைத்தலைவர்கள் செல்லத்துரை, கவிஞர் கொழுமம் ஆதி, இணைச் செயலாளர் சிவகுமார், ராமச்சந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.

முடிவில் உடுமலை நாராயணகவி இலக்கிய பேரவை பொருளாளர் சீதாராமன் நன்றி கூறினார். கவிஞர் இளையபாரதி எழுதி இயக்கிய நாராயணகவி வாழ்க்கை வரலாறு குறித்த ஆவண திரைப்படம் திரையிடப்பட்டது. படத்திற்கான சி.டி. உடுமலை நாராயணகவி பேரன் மற்றும் மகனிடம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News