செய்திகள்
தற்கொலை

பாப்பாரப்பட்டி அருகே பெண் தற்கொலை

Published On 2021-10-03 12:49 GMT   |   Update On 2021-10-03 12:49 GMT
பாப்பாரப்பட்டி அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டி அருகே உள்ள பூதிநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேடியப்பன். கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி ஜமுனா (வயது 29). கணவன்- மனைவிக்கிடையில் அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்தது. நேற்று முன்தினம் ஜமுனா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News