செய்திகள்
கோப்புபடம்

கிராமசபை கூட்டம்-பொதுமக்கள் பரபரப்பு புகார்

Published On 2021-10-03 08:18 GMT   |   Update On 2021-10-03 08:18 GMT
கிராமசபை கூட்டத்தில் அனைத்து அதிகாரிகளை பங்கேற்க செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
உடுமலை:

உடுமலை செல்லப்பம்பாளையம் கிராம பொதுமக்கள்  மாவட்ட கலெக்டருக்கு ஒரு மனு அனுப்பி உள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. அப்போது ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட வரவு செலவு கணக்குகள் முறையாக தெரிவிக்கவில்லை. பதிவேடுகளையும் பார்வைக்கு வைக்கவில்லை.

எனவே முறையான வரவு, செலவு கணக்குகள் மற்றும் பதிவேடுகளுடன் கூடிய கிராம சபை கூட்டத்தை நடத்துவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிராம சபை கூட்டத்தில் அனைத்து அதிகாரிகளை பங்கேற்க  செய்யவேண்டும், தீர்மான புத்தகம், படிவநகல்கள் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும்.

கிராம சபையை அதிகாரிகள் குறித்த நேரத்தில் காலதாமதமின்றி நடத்தித் தரவேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்தனர்.
Tags:    

Similar News