செய்திகள்
காந்தி - காமராஜர் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்ட காட்சி.

உடுமலையில் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

Published On 2021-10-02 10:42 GMT   |   Update On 2021-10-02 10:42 GMT
உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நல்லாசிரியர் விஜயலட்சுமி மகாத்மா காந்தி மற்றும் காமராஜர் குறித்து பேசினார்.
உடுமலை:

உடுமலை உழவர் சந்தை அருகே உள்ள கிளை நூலகம் எண்-2ல் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் மகாத்மா காந்தி பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. கணேசன் வரவேற்றார் நூலக வாசகர் வட்ட துணைத் தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். 

நூலக வாசகர் வட்ட ஆலோசகர் ஐயப்பன் மகாத்மா காந்தி மற்றும் காமராஜர் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கோட்டமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் கலாமணி, பேராசிரியர் கண்டிமுத்து , தமிழ்நாடு அறிவியல் இயக்க உடுமலை கிளை தலைவர் செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

உடுமலை பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி நல்லாசிரியர் விஜயலட்சுமி மகாத்மா காந்தி மற்றும் காமராஜர் குறித்து மாணவர்களிடையே கலந்துரையாடல் நிகழ்த்தி காந்தியின் சுதந்திரப் போராட்ட வரலாறு குறித்துப் பேசினார். 

இதில் கோட்டமங்கலம் நடுநிலைப்பள்ளி, கேந்திரிய வித்யாலயா பாரதியார் நூற்றாண்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஓவியப் போட்டியில் கலந்து கொண்டனர். சுதந்திர தினத்தன்று நடந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் நூலகத்திற்கு வந்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நூலகர்கள் மகேந்திரன், மற்றும் நூலக வாசகர் வட்ட உறுப்பினர்கள் செய்திருந்தனர். ஓவியப் போட்டியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் புத்தகம் பரிசு வழங்கப்பட்டது.
Tags:    

Similar News