செய்திகள்
தங்கம்

தங்கம் விலை மீண்டும் ரூ.35 ஆயிரத்தை தாண்டியது

Published On 2021-10-01 05:58 GMT   |   Update On 2021-10-01 05:58 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 448 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.35,136-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக தங்கம் விலையில் ஏற்ற- இறக்கம் கண்டு வருகிறது.

இதன் எதிரொலியாக செப்டம்பர் மாதத்தில் முதல் இரண்டு வாரங்களில் ஏறுமுகமாக இருந்த தங்கம் விலை பின்பு குறைந்து வந்தது. இதனால் கடந்த 24-ம் தேதி அன்று ரூ.35 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்து பவுனுக்கு ரூ.34,896-க்கு விற்பனையானது. அதன் பிறகு தங்கம் விலை சற்று ஏற்றம், இறக்கம் கண்டு வந்தது.

ஆபரணத்தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.13 குறைந்து ரூ.4,336 ஆகவும், பவுனுக்கு ரூ.104 குறைந்து ரூ.34,688-க்கு விற்பனையானது. இந்த நிலையில், ஆபரணத்தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்து பவுன் ரூ.35 ஆயிரத்தை தாண்டியது.



அதன்படி, ஆபரணத்தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ.56 உயர்ந்து, ரூ.4,392-க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.448 உயர்ந்து, ரூ.35,136-க்கு விற்பனையானது.

இதேபோல் வெள்ளியின் விலையில் கிராமுக்கு 70 காசு உயர்ந்து கிராம் ரூ.63.70-க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.700 உயர்ந்து ரூ.63,700-க்கு விற்றது.


Tags:    

Similar News